அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி வருகிறது: எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு! samugammedia

அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் வட கொழும்பு ஆதார வைத்தியசாலை சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அங்கு சென்றிருந்ததுடன்,  ஊடகங்களிடம் கருத்துரைத்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Leave a Reply