காலாவதியான டின் மீன்கள் விற்பனை: சீன பிரஜை உட்பட ஆறு பேர் சிக்கினர்..! samugammedia

காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாயுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவற்றை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply