திடீரென புத்தருடன் காட்சியளித்த பிக்பாஸ் ஜனனி..! ஷாக்கான நெட்டிசன்கள்..!samugammedia

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட ஷோதான்  பிக்பாஸ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன்6 இல் பல இலட்சக்கணக்காணோரின் மனங்களில் இடம்பிடித்தவர்தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததன் பிற்பாடு இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் ஜனனி நடித்து வருகின்றார்.

இடையிடையே போட்டோசூட்களை நடத்தி அந்த படங்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் ஜனனி தற்பொழுது பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த படத்தில் ஜனனி கையில் புத்தர் சிலை ஒன்றினை வைத்திருந்தவாறு புன்னகையுடன் போஸ்ட் கொடுத்துள்ளார்.

இதனால், அவரது ரசிகர்கள் ஜனனி பௌத்த சமயத்திற்கு  மாறி விட்டாரா? என்று தலை  பிசைந்து வருவதுடன் கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *