மஹவ மற்றும் மெதிரிகிரிய பகுதிகளில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மெதிரிகிரிய புதிய நகரத்தில் இன்று (28) அதிகாலை வீட்டின் வௌியே வந்த 72 வயதான ஆண் ஒருவரை யானை தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மெதிரிகிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ மஹவ – சியவுத்தாகம பகுதியில் யானை தாக்கி 43 வயதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்த யானையை விரட்டுவதற்கு முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சடலம் மஹவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





