எரிபொருள் பவுசர்களில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலம்! samugammedia

எரிபொருள் பவுசர்களை பயன்படுத்தி எரிபொருளை எடுத்து, அதேயளவு மண்ணெண்ணெய் கலந்து விற்பனைக்கு விநியோகிக்கும் பாரிய மோசடி கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாபிம பகுதியில் உள்ள இரகசிய இடமொன்றிற்கு எரிபொருள் பவுசரை கொண்டு சென்று எரிபொருளை கலக்க முற்பட்ட சமயம் பொலிஸார் சந்தேகநபர்களை சுற்றிவளைத்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *