
கடந்த சில மாதங்களாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நடாத்தும்படி பாராளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்தன. நாடு தழுவிய ரீதியில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் மெளனமாக இருந்த வேளையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.





