யாழில் “சைவ சமய வாழ்வியலும் ஆன்மிகமும்” நூல் வெளியீடு samugammedia

யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த சைவப்புலவர் அ.இராஜரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட “சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும்” எனும் நூல்வெளியீட்டுவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(30) காலை 9.30 மணியளவில் நல்லூர்வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளரும்,கல்விஅமைச்சின் மேலதிக செயலாளரும்,முன்னாள் அரசாங்க அதிபருமாகிய உடுவை.எஸ்.தில்லை நடராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் ஆலய குரு ராதாகிருஷ்ணன் குருக்கள், நல்லை ஸ்ரீலஸ்ரீ.சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சரிய சுவாமிகள் ஆசியுரையினை வழங்கினர்.

கெளரவ விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜாவும், யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர்.பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும்,சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும், முன்னாள் மாநாகர ஆணையாளருமாகிய சீ.வீ.கே.சிவஞானமும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *