மகிந்த ராஜபக்ச போன்றோரை விட ரணில் தமிழ் மக்களுக்கு ஆபத்தானவர்! யோதிலிங்கம் எச்சரிக்கை samugammedia

ஐக்கிய தேசிய கட்சியோ, பொதுஜன பெரமுனாவோ எந்த ஒரு தேர்தலிலுமே வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லாத காரணத்தால் ஜனாதிபதி சட்ட மன்ற  தேர்தலையும் மாகாண சபை தேர்தலையும் தவிர்த்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான  சூழ்நிலையை உருவாக்க   முயல்கின்றார் என்று அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் இன்றைய ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, 13 இல் வழங்கப்பட்டுள்ள பொலிஸ்  அதிகாரம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயுதங்களுடன் கூடிய  பொலிஸ்  அதிகாரத்தை வழங்க  மறுப்பதற்கு, தென் தேசிய வாதத்தோடு முரண்பாட்டை ஏற்படுத்த விரும்பாததோடு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வெற்றி ஏற்படக்கூடிய சூழலை உருவாக்குவதுமே காரணம்  என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் 13 குள்ளே தமிழ் அரசியலை ஒடுக்குவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் 13 தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து நகைப்புக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச போன்றோரை விட ரணில் தமிழ் மக்களுக்கு ஆபத்தானவர் என்றும் இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் இலங்கையில் குடியேறி 200  வருடங்கள் ஆகின்ற நிலையில் அவர்களின் கஸ்ரங்களை வெளிப்படுத்தும் வகையில் மலையக பொது அமைப்புகள் மாண்புமிகு மலையகம் என்ற பெயரில் தலை மன்னாரில் இருந்து மாத்தளை வரை ஒரு பாதயாத்திரையை தொடக்கி இருக்கின்றார்கள்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மலையகத்துக்கு வந்து காடுகளாக இருந்த பிரதேசங்களை பெருந்திடங்களாக மாற்றி  மலையகத்தை வளப்படுத்து இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படும் அவர்கள்  இலங்கையின் நிர்வாக கட்டமைப்புடன்  இணைக்கப்படாமல் பெருந்தோட்டங்களில் அரை அடிமை நிலைமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த பாத யாத்திரையில் மலையக மக்களின் எதிர்காலம் தொடர்பாக அவர்களுடைய அரசியல் தொடர்பாக ஒரு  வலுவான தீர்மானத்தை எடுக்கக்கூடிய நிலைமையும் இருக்க வேண்டும்.

மலையக மக்களிடையே உள்ள  அடையாள பிரச்சினையை கோட்பாட்டு  ரிதியாக தீர்க்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், மலையக மக்களிற்கான ஒரு அரசியல் தீர்வு என்பது ஒரு நிலை ரீதியான அதிகாரப்பகிர்வா அல்லது சமூக ரீதியான அதிகாரப்பகிர்வா என்பவற்றயும் கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. 

ஆகவே   பாத யாத்திரையை அடிப்படையாக வைத்து மலையக மக்களினுடைய அரசியல் தொடர்பான கோற்பாட்டு பிரச்சினைகளிற்ற்கு தீர்வு காணக்கூடிய வகையில் இந்த பாத யாத்திரை அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *