வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! வெளியான அறிவிப்பு..!samugammedia

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத் துறைகளில், வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு இலவச பயிற்சிகளை வழங்கவுள்ளது.

இலங்கை சுற்றுலா மற்றும் விடுதிகள் முகாமைத்துவ நிறுவனத்தினால் மூன்று மாதங்களுக்கு வரவேற்பறை முகாமைத்துவம், மற்றும் சமையற்கலை ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த பயிற்சி நெறிக்கு வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசித்து வரும் க.பொ.த சாதாரணதரம் வரை கற்றுள்ள, வேலையற்ற இளைஞர், யுவதிகள் விண்ணப்பிக்க முடியும்.

குறித்த பயிற்சி நெறியில் இணைந்து கொள்ள விரும்பவர்கள்,தமது முழுப்பெயர், முகவ ரி,தேசிய அடையாள அட்டை இலக்கம், மற்றும் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி மற்றும் பயிற்சி பெறவிரும்பும் துறை ஆகிய விபரங்களை பிரதேச செயலகத்தின் ஊடாக அல்லது பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலா பணியகம், ஏ9 வீதி, கைதடி என்னும் முகவரிக்கு அனுப்புமாறும், பயிற்சி நெறி குறித்த மேலதிகத் தகவல்களுக்கு 021 2217311 என்னும் தொலைபேசியூடாகத் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *