இலங்கையின் அரசியல் அமைப்பை தீயிட்டு எரித்து விட்டு சர்வதேச சமூகத்தை நோக்கி செல்லுகின்ற நிலை ஏற்படும்..! சிவாஜிலிங்கம் எச்சரிக்கை..!samugammedia

”இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”தமிழ் மக்கள் விரும்பும் தீர்வினை நாங்கள் வழங்க முடியாது” என்று  அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் அமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள எவரது அங்கீகாரமும் தேவையில்லை. ஆனால் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் பாராளுமன்றத்தை கேட்கவேண்டுமென ஒரு பித்தலாட்டத்தை நடத்தி வருகின்றார்.

தமிழ் மக்களிடம் நாம் கூறவிரும்புவது என்ன வென்றால் எமது சுதந்திரத்துக்கான பொதுசனவாக்கெடுப்பை கோரும் செயற்பாடானது ஒரு சில கட்சிகள்  மாத்திரமே முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அனைவரும் இது குறித்து பேசுமிடத்து இவ்விடயத்தில் சர்வதேசம் தலையிட்டு ஒரு பொது ஜனவாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்கள் கேட்கும்  சுதந்திரத்தைப் பெறமுடியும்.

13 ஆவது திருத்தத்தை சிங்கள இனவாதிகள் எரித்தார்கள். இதே போன்றதொரு நிலைமீண்டும் ஏற்பட்டால்  இலங்கையின் அரசியல் அமைப்பையே தீயிட்டு எரித்து விட்டு சர்வதேச சமூகத்தை நோக்கி செல்லுகின்ற நிலை ஏற்படும் . ஆகவே இலங்கை அரசு தொடர்ந்து ஏமாற்றுகின்றது என்றால்  அதற்கு ஏமாறுபவர்களும்  பொறுப்பாளிகள் ஆகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *