வடகிழக்கே தமிழர்களுக்குப் பாதுகாப்பான இடம்

வடகிழக்கே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம்  என்பதை வெளிப்படுத்திய நாளாக யூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அமெரிக்க மிஷனில் நடைபெற்ற யூலை கலவரத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”

திருநெல்வேலி,தபால்பெட்டி சந்தியில் நடாத்தப்பட்ட இராணுவத்திற்கு எதிரான கண்ணிவெடி தாக்குதலுடன் யூலை கலவரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஆனால் இந்த யூலை கலவரம் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு கண்ணிவெடி தாக்குதல்தான் காரணம் அல்ல.அரசினால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யூலை கலவரம் நடைபெறுவதற்கு முன்பாக யாழ் பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களும் இராணுவமும் படுகொலைசெய்யப்பட்டதாக தெற்கில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் பொரளையில் இராணுவத்தின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றதன் பின்னர் 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணி,தங்கத்துரை,ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களின் அனுசரணையுடனும் சக அரசியல் கைதிகள் தாக்குதல் மேற்கொண்டு படுகொலைசெய்தனர்.

கறுப்பு யூலையின் தொடக்க சம்பவம் அதுவாகும்.அதன் பின்னர் கொழும்பு தலைநகரில் 3000க்கும் அதிகமான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டதுடன் அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன.

அதனை தொடர்ந்து மலையக மக்களும் கொன்றொழிக்கப்பட்டனர்.இன்று நாங்கள் அவர்களின் 200வது ஆண்டை நினைவுகூர்ந்துவருகின்றோம்.

மலையக மக்கள்  செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களின் லயன்குடியிருப்புகள் அழிக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்கள்.அதன்போது மலையக மக்களும் கொழும்பு தமிழ் மக்களும் வடகிழக்கிற்கு புகழிடம் தேடிவந்த நாளாகவும் இது காணப்படுகின்றது.


சிவில் சமூக செயற்பாட்டாளரும் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மேலாளருமான அருட்தந்தை லூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,அருட்தந்தையர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *