சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் இருப்பு இன்று (02) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில்,
சினோபெக் எரிபொருளின் முதல் தொகுதி நேற்று நாட்டுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
எரிவாயு நிலைய விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், சினோபெக் நிறுவனம் நாடு முழுவதும் 150 எரிவாயு நிலையங்களுடன் செயல்படத் தொடங்க உள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் கூற்றுப்படி, சினோபெக் நேரடியாக அந்நிய செலாவணியை செலவழித்து எரிபொருள் இருப்புக்களை இலங்கைக்கு கொண்டுவருகிறது.
இதனால் இலங்கையிலுள்ள உள்ளுர் நிதி நிறுவனங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது எனவும், 12 மாத நிதி வசதிகளுடன் இந்த எரிபொருள் இருப்புக்களை இலங்கைக்கு கொண்டுவர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சினோபெக் நிறுவனத்தினால் 45,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு முதல் கப்பலாக கொண்டு வரப்பட்டதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் குறிப்பை வெளியிட்டுள்ளது.