சஜித் பிரேமதாசா ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமற்றவர் – விக்னேஸ்வரன் தெரிவிப்பு! samugammedia

சஜித் பிரேமதாசா ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமற்றவர் என  பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற உடக சந்திப்பிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் சமகால நடைமுறை அரசியல் விடய்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்  ;

13 ம் திருத்தச் சடடம் பற்றி ஜனாதிபதி பாராளுமன்றில்  உரையாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது. பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்தாலும் அதை பிரச்சினையாக மாற்றி 13 ம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்படுத்தாமலிருப்பதைத் தவிர்க்கப் பார்க்கின்றோம்.  எந்தவொரு அரசியல்வாதியும் எது சரியென்று செய்வதிலாலை மாறாறக எதைச் யெ்தால் மக்களின் ஆதரவும் கண்டனமும் கிடைக்குமென்பதைப் பார்த்தே செய்கின்றார்கள். 

13 ம் திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபை முறைமையை கூடிய பலமுள்ளதாக எவ்வாறு செயற்படுத்த முடியும் என்பதை கவாநிதி விக்னேஸ்வரனுடன் இணைந்து தயாரித்த ஆவணமொன்றை  ஜனாதிபதி்கு வழங்கியுள்ளோம். அதை அமுல்ப்படுத்தவுள்ளதாக பேசியுள்ளார்.

தற்போது இந்திவிற்குச் சென்று வந்துள்ள நிலையில்  தம்மால் தயாரிக்கபட்ட  13 ம் திருத்தச்சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த வேண்டுமென மோடி.அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தந்தை  விரும்பிய முறையில்  மாற்ற  முடியாதென ஏற்கனவே கூறியிருந்தேன். 

அவர் 13 ம் திருத்தச்சட்டம் பற்றி பாராளுமன்றத்தில் கருத்ததுத் தெரவிப்பது வரவேற்க்கப்பட வேண்டியது.  அக் கருத்தை வைத்துக்கொண்டே நாம் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இச் சட்டத்திலுள்ளவற்றைத் தான்றோத்தித்தனமாக நீக்க முடியாது. இதேவேளை ஏனைய ஏழு மாகாணங்களிலுள்ள அரசியல் தலைவர்களும் பொலிஸ் அதிகாரங்களைக் கோருகின்றனர். 

பொலிஸ் அதிகாரங்களுக்கு படித்த இளைஞர்ளைக் கடமையாற்றுவதை தடுப்பதற்கு என்ன காரணமிருக்கின்றது.  எமது இளைஞர்கள் பொலிஸ் சேவையி்ல் இணைந்த பின் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குதலானது வன்முறையில் முடியுமாக இருந்தால்  பாண்டிச்சேரியில் இருப்பது போல் பொல்லுடனும் விலங்குடனும் கடமையில் ஈடுபடுத்தலாமென கூறியிருந்தேன்.

இது தொடர்பில் தமிழ்க் கட்சியிலுள்ளவர்கள் ன்னுடன் எவ்வித கருத்துக்ளைப் பிராத போதும் கிரியல்ல மற்றும் வெல்கம ஆகியோர் சிங்களத் தரப்பில் வரவேற்றனர்.

சிறிது சிறிதாக எங்களுடைய  அதிகாரங்ளைக் கையிலெடுத்துக்கொள்ள வேண்டும். சமஸ்டி , கூட்டு சமஸ்டி என ல கட்சிகள் கூறினிலும் இவை அனைத்தும்  தூரததிலுள்ள குறிக்கோள் .  

தற்போது எவ்வித அதிகாரங்களும் அற்ற நியைில் அதிகாரங்களைப் பெற்று அதை அதிகரிக் வேண்டிய தேவையுள்ளதால் தான் 13 ம் திருத்தச்சட்டத்தைக் கோருகின்றோம் ஆயினும் அது தீர்வாக அமையாது.எனினும் இவ் அதிாரங்களைப் பெறுவதனூடாக பௌத்த பி்க்குகள் உட்பட ஏனையவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

13 ம் ஐ பெற்றால் பிரச்சனை தீர்ந்துவிட்டதாக சிங்களத் தரப்பு கூறினாலும் நாம் தான கவனமாக இருக்க வேண்டும்.  மக்களுக்கு அதிகாரங்களை பெற்றுக்கொள்ள கூடியவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சமஸ்டி தான் குறிக்கோள் என கூறினாலும் நான் உட்பட எந்தவொரு தரப்பும் கூறியதாகத் தெரியவில்லை.  

சிங்களத் தரப்பிற்கு நாம் ஒரே குறிக்கோளைக் கொண்டுள்ளோம் என்பது முக்கியமான விடயம். பெரும்பான்மை பலத்தை ஓரினம் வைத்துக்கொண்டு தம்கு சாதகமான சட்டத்தை கொண்டுவந்து சிறுபான்மையினரை அடக்கும் நிலை காணப்படுகையில் தான் ஒற்றையாட்சியில் தமிழருக்கு நன்மைகள் கிடையாது என்ற காரணத்தாலே சமஷ்டியைக் கோருகின்றோம்.

எப்பொழுது பௌத்தம் இலங்கைக்கு வந்து 700 வருடங்களின் பின்னரே சி்கள மொழியும் சிங்கள மக்களும் வந்தார்கள்.  தற்போது சுத்துமாத்து வேலைகளில் ஈடுபட்டு சி்ங்களவர்கள் இருந்தார்களென எடுத்துக்காட்ட முனைகின்றார்கள் இது சம்பந்தமாக தொல்பொருட் திணைக்களத்துடன் பேச வேண்டிய நிலையுள்ளது.  

ரணில் விக்கிரமசிங்க தற்போது வேறொரு கட்சியின் தயவில் உள்ளார்.  ஆனால் அவரோடு இருந்தவர்கள் அவருடைய ாலை வாரவுள்ளனர்கள் என்பதைச் சொல்ல முடியாது. நான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் என்னுடைய காலை சிலர் வாரப் பார்த்தார்கள்.  எது எவ்வாறாயினும் ஜனாதிபதிப் பதவிக்கு சஜித் பிரேமதாசா பொருத்தமற்றவர் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *