வட மாகாண ஆளுநர் முறையற்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் வேண்டுகோள்! samugammedia

அரசியல்வாதிகளின் கடிதங்களுக்கெல்லாம் வடமாகாண ஆளுநர் இடமாற்றங்களை வழங்க உத்தரவிடுவதும், இடமாற்றச்சபை தீர்மானங்களை புறந்தள்ளி, கல்வி தொடர்பான சுற்றுநிருபங்களையும் மீறிய செயலாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  உப தலைவர் தீபன் திலீபன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண ஆளுநர் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தவும், தனது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகவும் வடமாகாண ஆளுநர் முறையற்றவகையில் செயற்படுவது வடமாகாண கல்வியை சீரழிக்க துணைபோகும் செயற்பாடாகும்.  

வடமாகாண ஆளுநரின் இத்தகைய அருவருப்பான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த முறையற்ற செயற்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் – வடமாகாண கல்வியமைச்சும், வடமாகாண கல்வித் திணைக்களமும் வடமாகாண ஆளுநருக்கு அவரது தவறுகளை சுட்டிக்காட்டி வடமாகாண கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்த முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *