அமைச்சர் காஞ்சன வீட்டிற்கு விசேட பாதுகாப்பு! இராணுவத்தை களமிறக்க திட்டம் samugammedia

 

விவசாய பயிர்களுக்கு நீர் வழங்குமாறு கோரி விவசாயிகள் குழுவொன்று மாத்தறைக்கு படையெடுக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அமைச்சரின் வீட்டிற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் குழுக்கள் நுழைவதை தீவிரமாக சோதனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் இருந்து மாத்தறைக்கு பிரவேசிக்கும் பகுதியிலும், கொழும்பில் இருந்து மாத்தறைக்குள் நுழையும் பகுதியிலும் இரண்டு விசேட பொலிஸ் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இரவு பகலாக தொடர்ச்சியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும், 25 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 15 இற்கும் மேற்பட்ட இரும்பு சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தேவையெனில் இராணுவத்தை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, கடும் வறட்சி நிலவும் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தண்ணீர் கோரி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *