கிளி பீப்பிள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு விழா

கிளி பீப்பிள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு விழாவொன்று நேற்றைய தினம்  கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் தலைமுறையை போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும், விளையாட்டுத் திறணை விருத்தி செய்யும் வகையிலும் குறித்த விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கூடைப்பந்து, கரம், பற்பின்னல் என பல்வேறு விளையாட்டுக்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த விளையாட்டு விழாவில் பெருமளவான இளைஞர் யுவதிகள் போட்டிகளில் ஆர்வத்துடன் தமது கழகங்கள் ஊடாக கலந்து கொண்டிருந்தனர்

இதன்போது வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும், கேடயங்களும், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பாடசாலை அதிபர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் எனப்  பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *