யாழில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலி!

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கு வலய முன்னாள் உப தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், ஜூன் 19ஆம் திகதி தனது 77ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அன்னாரின்  நினைவஞ்சலிக் கூட்டம் நேற்றைய தினம்(06) இளநிலை சட்டத்தரணிகளினால்  யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக் கூட்டத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, தவத்திரு வேலன் சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *