மட்டக்களப்பு வாகரையில் இரு பொலிஸாருக்கிடையே கைகலப்பு: ஒருவர் காயம்! samugammedia

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் வாகன சாரதிக்கும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட வாக்குவாதமே இவ்வாறு கைகலப்பில் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சாரதி கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் நீதவான் அவரை பிணையில்  விடுவித்துள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  கைதுசெய்யப்பட்டவர் தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *