இலங்கையில் மாம்பழம் ஒன்று 85ஆயிரம் ரூபா…! ஷாக்கான மக்கள்..!samugammedia

வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நடைபெற்ற ஏலத்தின் போது மாம்பழம் ஒன்று 85,000 ரூபாவிற்கு ஏலம் போனது.

வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் இந்து ஆலயத்தில் நேற்று (13) விசேட பூசை மற்றும் நிகழ்ச்சியின் பின்னர் இடம்பெற்ற ஏலத்தில் மாம்பழம் ஒன்று 85,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த மாம்பழத்தை லண்டனை சேர்ந்த தம்பதியினர் வாங்கிச் சென்றதுடன் இவ்வளவு தொகைக்கு மாம்பழம் ஏலம் விடப்படுவது இதுவே முதல்முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலத்தில் பெறப்படும் பணம் ஆலயத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *