பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு அருகில் உள்ள வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.
அந்தவகையில் பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெரஹெரா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த பெரஹெரா நாளை (17) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இரவு 7.00 மணிக்கு பெல்லன்வில விகாரையில் ஆரம்பித்து வீதி உலா செல்லவுள்ளது.
இதன்படி நாளை முதல் 20ஆம் திகதி வரையில் இடம்பெறும் ஊர்வலத்தின் போது விகாரைக்கு அருகில் உள்ள வீதிகள் மூடப்படவுள்ளதால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.





