'பூத்த கொடி பூக்கள் இன்றித் தவிக்கின்றது'…! பிரபல பாடகர் குமாரசுவாமி காலமானார்…!samugammedia

 கர்நாடக இசைக்கலைஞரும் ஈழத்தின் புகழ்பெற்ற பாடகருமான செல்லத்துரை குமாரசாமி தனது 72 வது வயதில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

1951 இல் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை பட்டதாரி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இசைத்துறை விரிவுரையாளராகவும் பிரதி அதிபராகவும் சேவையாற்றினார்.

‘பூத்த கொடி பூக்கள் இன்றித் தவிக்கின்றது’ என்ற ஈழத்து  திரைப்படப் பாடல் இவர் பாடிய பிரபல பாடல் என்பதுடன் ‘ஈழத்துச் சீர்காழி’ என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

மிகச்சிறந்த கர்நாடக இசைக்கலைஞர் ‘ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் குமாரசுவாமி ஜயாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *