சுற்றுலாத்துறையில் பயிற்சி பெற்ற நுவரெலியா இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (28) இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் திருமதி சோஃபி கார்டன் தலைமையில் இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட செயலக மிராக்கிள் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 16 இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் உள்ள Griffith பல்கலைக்கழகத்தில் நிலையான சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான உயர் கல்வியைப் பெற்ற இலங்கை மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பாடநெறிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆதரவை வழங்கியுள்ளது.
இரண்டு மாதங்கள் நடைபெற்ற இப்பயிற்சியில், நிலையான சுற்றுலா மேம்பாடு குறித்த பயிற்சி திறன்கள் வழங்கப்பட்டன.