கடல் வளங்களை பேண்தகு முறையில் பாதுகாக்கும் விழிப்புணர்வு செயற்திட்டம்…! பூநகரியில் முன்னெடுப்பு…!samugammedia

“கடல் வளங்களை பேண்தகு முறையில் பாதுகாத்தல்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டமும், பயிற்சி செயலமர்வும் இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு, மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

சர்வதேச கடற்கரையோர சுத்திகரிப்பு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பூநகரி பிரதேச சபை செயலாளர் தயாபரன், மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் மற்றும் ஊழியர்கள், பூநகரி கடல் தொழில் சங்க சமாசத் தலைவர் ஜோசப் பிரான்சிஸ், கடல் தொழில் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply