முருங்கை செய்கையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்…! முருங்கை செய்கையாளர்கள் வேண்டுகோள்…!samugammedia

முருங்கை செய்கையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்று மயில்வாகனபுரம் முருங்கை செய்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த  முருங்கை செய்கையாளர்,

முருங்கை செய்கையில் முன்மாதிரியான கிராமமாக விளங்கும் மயில்வாகனபுரத்தில் பசளைகள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக சீராக முருங்கை செய்கையை முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 800 முதல் 900 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முருங்கை தற்போது 30  ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

குறைந்தளவு முருங்கை காய்களுக்கே கொள்வனவாளர்களால் கேள்வி எழுப்புவதாகவும் இந் நிலையில் சந்தைப்படுத்துவதில் பிரச்சனை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மயில்வாகனபுர கிராமத்தில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் முருங்கைசெய்கையை நம்பி இருக்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் தோட்டங்களை முற்று முழுதாக கைவிடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு முருங்கை செய்கையாளர்களுக்கு சீரான பசளைகள், மருந்துகளை பெற்று கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து முருங்கை செய்கையை ஊக்குவிப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply