அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட புகையிரத சேவை…! சற்றுமுன் வெளியான வர்த்தமானி அறிவித்தல்…!samugammedia

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடரூந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளை (13) முதல் மக்கள் எதிர்நோக்க வேண்டிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் புகையிரத சேவையை பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறும், நாளை முதல் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்குமாறும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கிறேன் என முன்னதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply