அகில இலங்கை பாடசாலை ரீதியில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை! samugammedia

அகில இலங்கை பாடசாலை ரீதியிலான பளு தூக்கல் போட்டி  கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளான T.Kosiya (under 17) 45 kg எடை பிரிவில் 95kg எடை தூக்கி 1ம் இடத்தையும், A.Kavijeliny (under 17) 81kg எடை பிரிவில் 78kg எடை தூக்கி 2ம் இடத்தையும், R.Tharaniya (under 20) 87kg+ எடை பிரிவில் 97kg எடை தூக்கி 4ம் இடத்தையும் பெற்றதோடு வவுனியா பெரிய கோமரசங்குள மகா வித்தியாலயம் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற போட்டியில் மாணவிகள் பங்கு பற்றி பி.மேரி அசெம்ரா (under 20) 55kg எடை பிரிவில் 77kg எடை தூக்கி 3ம் இடத்தையும் பா.கிசாளனி (under 20)49kg எடை பிரிவில் 65kg எடை தூக்கி 6ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

குறித்த மாணவர்கள் ஞா. ஜீவன் ஆசிரியரின் பயிற்றுவிப்பில் பயிற்சி பெற்று இறம்பைக்குளம் மகாவித்தியாலய பொறுப்பாசிரியராக திருமதி J.D.ரெஜினோல்ட் பெரேரா மற்றும் பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரிய டெய்சி ஆகியோரின் பங்களிப்புடனும் பெரிய கோமரசன்குளம் பொறுப்பாசிரியராக திருமதி கி.அம்பிகா மற்றும் பாடசாலை அதிபர் S. வரதராஜா ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் போட்டியில் பங்குபற்றி வெற்றியினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *