நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களையும், மக்களின் உயிர்களையும் அரசு பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாட்டில் சட்டம் ஒழுங்கு ஆபத்துக்குள்ளாகி இருக்கின்றது. நாடு முழுவதும் கொலைகள், கொள்ளைகள்,ஊழல்கள், தாக்குதல்கள் போன்றவை தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.
இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இதுபோன்ற அநாகரிக செயல்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலவே 220 இலட்சம் மக்களின் உயிர்களையும் அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.