தியாகி திலீபன் நினைவுநாள் நிகழ்வுகளை தடை செய்யக்கோரி பருத்தித்துறை பொலிசார் தாக்கல் செய்த மனுவை, பருத்தித்துறை நீதிமன்றம் நிராகரித்தது.
தியாகி திலீபன் நினைவு நிகழ்வுகள், ஊர்தி பவனிகளை நடத்துவதன் மூலம் வன்முறைகள் உருவாகும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு பருத்தித்துறை பொலிசார் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய பொலிசாருக்கு அதிகாரமுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அமைதியான நினைவு நிகழ்வுகளை தடுக்க முடியாதென உத்தரவிட்டார்.