யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால். தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் இன்று மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களை மையபடுத்தியும் ,மன்னார் நகர பகுதியிலும் தியாக தீபத்தின் வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
தியாக தீபத்தின் நினைவேந்தலினை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வடக்கு தழுவிய ரீதியில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.