கிளிநொச்சியில் அரச திணைக்களத்தின் திடீர் பாய்ச்சல்…! சிக்கிய வர்த்தகர்கள்…!samugammedia

கிளிநொச்சி மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் இன்று(22) வியாழக்கிழமை கிளிநொச்சி சந்தைப்பகுதியில் திடீர்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சந்தைப்பகுதியிலுள்ள பலசரக்குக் கடைகள், மரக்கறி சந்தைகள், பழக்கடைகள், தேங்காய் விற்பனை இடங்கள், நகைக் கடை போன்ற இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது அரச அனுமதியற்ற தராசுகள் அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள்  திணைக்களத்தினரால், கரைச்சி பிரதேச சபையினரின் ஒத்துழைப்போடு  கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், உரிய காலத்தில் அளவீட்டு நியமங்கள் செய்யாத 03 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *