சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10,000 ரயில் தண்டவாளங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை மஹவ முதல் கொழும்பு வரையிலான ரயில் மார்க்க வளைவுகளுடன் கூடிய இடங்களில் பொருத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படாவிட்டால், ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் பதிவாகுமென அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான மார்க்கத்தில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் போக்குவரத்தை முன்னெடுக்க முடியுமெனவும் ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்துள்ளார்.