51வயதுடை ஆணொருவர் இன்றையதினம் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – மயிலங்காடு, ஏழாலை பகுதியில் வசித்து வந்த ஆறுமுகம் துரைராசாவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றையதினம் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் அவரை தேடிச் சென்றபோது, இன்று காலை தோட்டக் கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
அவர் மது போதையில் தவறி கிணற்றினுள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.





