முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனமுற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாமன்கடை பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று மதகுருமார்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ள காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





