தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த யாழ் இளைஞன்…! குவியும் பாராட்டுக்கள்…!samugammedia

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் “சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் ஒன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பூவன் மதீசன் எழுதியுள்ளதாக  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றையும் நடாத்தியிருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சந்தோஷ் நாராயணன்,

நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

“ஜிகர்தாண்டா double x” படத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய காட்சி இருப்பதாகவும் அதனை அருமையாக இயக்குநர் கையாண்டிருப்பதாகவும் தெரிவித்த சந்தோஷ் நாராயணன், அதற்கேற்றது போல யாழ்ப்பாணத் தமிழில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பாடலையே நம் நாட்டு பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞனான பூவன் மதீசன் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் மதீசனுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த யாழ் இளைஞனான  பூவன் மதீசனுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *