லைபீரியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் கென்யாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கனகநாதனுக்கு லைபீரியா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கனநாதனின் தேர்தல் கண்காணிப்பை நாடிய ஐந்தாவது ஆபிரிக்க நாடு இதுவாகும். இது இலங்கைக்கு மிகப்பெரிய பெருமையாகும். கடந்த காலங்களில், கென்யா, நைஜீரியா, சியரா லியோன் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் தேர்தல் பார்வையாளராக கனநாதன் பணியாற்றினார்.
கனநாதனை அழைக்கும் லைபீரியா அரசின் முடிவு, ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் மக்களின் குரல் ஒலிக்கப்படுவதை உறுதி செய்வதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக கிடைக்கப்பெற்ற பணியாகும்.
லிபேரியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் கனநாதன் கலந்துகொள்ள உள்ளமை, தேர்தல் கண்காணிப்புத் துறையில் அவருக்குக் கிடைத்துள்ள உலகளாவிய மரியாதையும் அங்கீகாரமும் ஆகும்“ எனவும் கனநாதனின் அலுவலகம் கூறியுள்ளார்.
லைபீரியாவின் 5.4 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 2,471,617 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
ஜனாதிபதி, பதினைந்து (15) செனட்டர்கள் மற்றும் எழுபத்து மூன்று (73) பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவே இங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டணியின் (CDC) தற்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் வீஹ் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.




