மன்னார் செஞ்சிலுவை சங்கத்தின் முன்னால் சர்சைக்குரிய தலைவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
மன்னார் செஞ்சிலுவை சங்கத்தின் முன்னால் தலைவர் கடந்த வாரம் அத்துமீறி செஞ்சிலுவை சங்ககட்டிடத்தை மூடி அடாவடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் குடி போதையில் வாகனம் செலுத்தியதன் அடிப்படையின் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
குறித்த சர்சைக்குறிய செஞ்சிலுவை சங்க தலைவர் முன்னதாவே பல அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்ட போதிலும் அதிகாரத்தை பயன்படுத்தியும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மதம் சார்ந்த அமைப்பு ஒன்றுடனும் இணைந்து அவை தொடர்பான முறைபாடுகளை இல்லாமல் செய்த நிலையில்
தற்போது பதவி பறிக்கப்பட்ட நிலையில் குறித்த மத அமைப்பினராலும் கைவிடப்பட்ட நிலையில் அவர் தொடர்பிலான பல்வேறு ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





