எனது உடல் நிலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களனி ரஜமஹா விகாரைக்கு நேற்றையதினம் வழிபாடுகளுக்காகச் சென்ற அவர் வழிபாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நான் நல்ல உடல் நிலையுடன் உள்ளேன். என்னைப் பார்த்தால் உங்களுக்கு நோய் வாய்பட்டவராக தெரிகின்றேனா?
சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். உங்களால் நான் நோய் வாய்ப்பட்டுள்ளேனா அல்லது நல்ல நிலையில் உள்ளேனா என்பதை பார்க்க. முடிகிறதல்லவா என தெரிவித்தார்.





