யாழில் புரட்டாசி சனி இரண்டாவது வார வழிபாடுகள்…!samugammedia

வரலாற்று சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் புரட்டாசி சனி வாரத்தின் இரண்டாவது வார உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வசந்த மண்டபத்தில் இருந்து அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள், சீதேவி, பூமாதேவி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதணைகள் இடம்பெற்று புரட்டாசி சனி உற்சவத்தின் சனீஸ்வர உற்சவம் இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு இ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் கலந்துகொண்டு உற்சவ கிரியையினை நடாத்திவைத்தனர்..

இந் நிகழ்வில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டதுடன் எள் தீபமேற்றி  தமது நேர்த்தி விரத கடமைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *