சென்னை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் 200 வது தடவையாக சேவையில் ஈடுபட்டுள்ளது.
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய விமானம் அக்டோபர் (02 )ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது.

இதன் மூலம் 21,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இச்செயற்பாடானது இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.




