முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் சற்றுமுன் யாழ் கொக்குவில் பகுதியில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம் மனித சங்கிலிப் போராட்டமானது யாழ். நகர் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித சங்கிலிப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முன்னாள் மாகாண சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசியல் தரப்பினர் என பலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


The post யாழில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.





