திருகோணமலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தைப்படுத்த முடியாத அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த நான்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நேற்று (03)இடம்பெற்றதுடன் இதன் போது மூதூரில் 3 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமும் கிண்ணியாவில் ஒரு வர்த்தக நிலையமும் என நான்கு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை திருகோணமலை நகர் பகுதியில் அரிசியின் விற்பனை விலை காட்சிப்படுத்தாமையினால் வர்த்தக நிலைய உரிமையாளர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.





