பதஞ்சலிஷேஸ்திர நடனாலயத்தின் 20ஆவது ஆண்டு விழா…!samugammedia

பதஞ்சலிஷேஸ்திர நடனாலயத்தின் 20ஆவது ஆண்டு விழாவானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(08) காலை 9 மணியளவில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறை தலைவர், செல்வி.மைதிலி அருளையா கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், சிறப்பு விருந்தினர்களாக மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் ஓய்வு நிலை உப அதிபர் திருமதி. நந்தினி சிவராஜனும், யாழ் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. சு. விஜயரத்தினமும்  கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி. சுபத்திரா கந்தகுமார், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஸ்ரீதேவி கண்ணதாசன் மற்றும் யா/ வட்டு இந்து கல்லூரி அதிபர் குமரவேல் லங்காபிரதீபனும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *