நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் குடும்பத்தை சேர்ந்த 48 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சேதமடைந்த வீடுகள்
வெள்ளம், மண்சரிவு, காற்றால் மூன்று வீடுகள் முழுமையாகவும் 686 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
220 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.38 ஆயிரத்து 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 120 குடும்பங்கள் பாதிப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.




