வடமாகாண கல்வி அமைச்சில் ஊழல்…!மோசடியாளர்களை பாதுகாக்கும் ஆளுநர் செயலகம்…! ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு…!samugammedia

வடமாகாண கல்வி அமைச்சில் ஊழல் மோசடிகள் புரையோடிப்போயுள்ள நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகம் அதற்கு துணைபோவதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் கொக்குவில் இந்து கல்லூரி அதிபர் விடயத்தில் முறைமைகளுக்கு உட்பட்டு விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று(05) நடத்திய ஊடக சந்திப்பில் இலங்கை ஆசியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண கல்வி அமைச்சிலே வடமாகாண கல்வித்துறை சார்ந்து நீண்டகாலமாக ஊழல் மோசடிகள் புரையோடி காணப்படுகின்றது. இது தொடர்பாக நாங்கள் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்ற போதிலும் கல்விப்புலம் சார்ந்த அதிகாரிகளால் இந்த முறைகேட்டுவாதிகள் காப்பாற்றப்படுகின்ற நிலையே தொடர்ச்சியாக காணப்பட்டு வந்துகொண்டிருக்கு.
இதற்கு சிறந்த உதாரணமாக அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபரினுடைய விடயத்தை நாங்கள் குறிப்பிட வேண்டும். ஆரம்பத்திலே கொக்குவில் இந்துக் கல்லூரியினுடைய அதிபர் தொடர்பான நிதிக்கையாளுகை மற்றும் பாடசாலை நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக பலதரப்பாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணகைள் கோரப்பட்ட நிலையிலேயே வடமாகாண கல்வி அமைச்சு நீண்டகாலமாக இந்த முறைகேடுகளை மூடி மறைத்து ஊழல்வாதிகளை காப்பாற்றும் விதமாகத்தான் செயற்பட்டு வந்துகொண்டிருகிறது.
கொக்குவில் இந்துக் கல்லூரியினுடைய தற்போதைய அதிபர், வடமாகாண சபையினுடைய ஆட்சிக் காலத்திலே கல்வி அமைச்சராக இருந்த சர்வேஸ்வரன் அவர்களுடைய உறவினர் என்பதற்காக நியமனம் செய்யப்பட்டவர்.
 இந்தநிலையிலேயே பல நிர்வாக முறைகேடுகளை செய்த நிலையில் பலதரப்பாலும் குற்றச்சாட்டப்பட்ட நிலையிலேயே இறுதியாக தற்போது ஆளுநருடைய செலாளராக இருக்கின்ற நந்தகோபாலன் மூலமாக விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அந்த விசாரணையில் கூட அவருடைய முறைகேடுகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டது.
இதே நந்தகோபாலன் தலைமையில் தான் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினடைய அதிபர் தொடர்பாக இலங்கை ஆசியர் சங்கம் முன்வைத்த 11 இற்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என ஒரு விசாரணைக்குழு அமைக்ப்பட்டது. அவர் அங்கே சென்று எந்தவிதமான அடிப்படையான விசாரணைகளையும் மேற்கொள்ளாமல் குறித்த அதிபரை பாதுகாக்கின்ற விதமாகத்தான் செயற்பட்டிருந்தார்.
அதன் பின்னர் வந்து இதற்குரிய ஆதாரங்களை தந்தால் தாங்கள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் என கடிதம் மூலம் கேட்டிருந்தார். அதனடிப்படையில் நாங்கள் அனைத்திற்கும் ஆதாரங்களை பதிவுத் தபால் மூலமாக நந்தகோபாலன் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக உதவி பணிப்பாளராக இருந்த பொழுது அனுப்பியிருந்தோம்.
 இருந்தும் நாங்கள் அனுப்பிய ஆவணங்களை பரிசீலிக்காமலேயே அந்த ஆவணங்கள் கிடைப்பதற்கு முன்பாகவே விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்தி கல்வி அமைச்சிற்கு வழங்கியிருந்தார்.
ஆகவே தற்பொழுது ஆளுநருடைய செயலாளராக இருக்கின்ற நந்தகோபாலன் முறைகேட்டாளர்களுக்கு துணையாக எப்படியெல்லாம் துணை போயிருக்கக்கூடிய ஒருவர் என்பது வடமாகாண கல்விப்புலம் சார்ந்தவர்களும் வடமாகாண மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த செயலாளரை வைத்துக் கொண்டுதான் வடமாகாண ஆளுநர் செயலகம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது என்ற மிக வேதனையான செய்திகளையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். 
ஆளுநருடைய செயலாளர் நந்தகோபாலனால் விசாரிக்கப்பட்டு மூடி மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கொக்குவில் இந்துக் கல்லூரியினுடைய பழைய மாணவர்களால் அவர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையிலேயே கல்விப்புலம் சாராத ஒரு கணக்காளரை கொண்டு அந்த விசாரணைகள் நடைபெற்றதனால் தான் கொக்குவில் இந்துக் கல்லூரியினுடைய முறைகேடுகள் வெளிவந்தது. 
எனவே அந்த முறைகேடுகள் வெளிவந்ததை மூடி மறைக்க முடியாமல் குறித்த பாடசாலையினுடைய அதிபரை வலயத்தில் இணைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனற அடிப்படையிலேயே கல்வி அமைச்சின் செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டிக்கின்ற நிலையிலம் இன்று வரை கொக்குவில் இந்துக் கல்லூரியினுடைய அதிபர் வலயத்தில் இணைக்கப்படவில்லை என்பது அதிகாரிகளின் முறைகேடுக்கு துணைபோகின்ற தன்மைகளைத்தான் அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டுகின்றது என்ற குற்றச்சாட்டை இலங்கை ஆசியர் சங்கம் முன்வைக்க விரும்புகிறது.
ஏற்கனவே ஆளுநருடைய செயலாளராக இருந்த ஒருவர் கல்வி அமைச்சில் இடம்பெற்ற முறைகேடுகளுக்கு துணையாக இருந்து இன்று முறைகேடுகளினுடைய உச்சத்தில் இருக்கின்ற நிலையில் அவர் வடமாகாணத்திற்கு வெளியால் அனுப்பப்பட்டும் கூட வடமாகாணத்தில் உள்ள ஊழல்வாதிகளை முறைகேட்டாளர்களை பாதுகாக்கின்ற விதமாகத்தான் அவர் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 
அவருடைய அந்த செல்வாக்கின் அடிப்படையிலேயே சில விடயங்கள் ஆளுநர் செயலகத்தாலும் வடமாகாண கல்வி அமைச்சாலும் ஏனைய அதிகாரிகளாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு துன்பகரமான நிகழ்வு இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறான தலையீடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கொக்குவில் இந்துக் கல்லூரியினுடைய அதிபர் உடனடியாக வலயத்திலே இணைக்கப்பட்டு அவருக்கு பதவி உயர்வு என்ற போர்வையில் கோட்டக்கல்வி அதிகாரி பதவியையும் அல்லது பேவறு ஒரு உயர்ந்த பதவி நிலையினை வழங்கி பாதுகாக்கின்ற செயற்பாடுகளை வடமாகாண கல்வி அமைச்சும் ஆளுநர் செயலகமும் நிறுத்தி உடனடியாக ஒரு மோசடிக்காரரை எந்த விதத்தில் அணுக வேண்டுமோ எந்த விதத்தில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமோ அந்த விடயங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *