பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை கொள்ளையிட்ட சந்தேக நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போலி ஆவணங்களை தயாரித்து கொள்ளையிட்ட வாகனங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் காலி, தங்காலை, ஹோமாகம உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





