வடக்கு ஆளுநரின் வருகைக்காக காத்திருந்த இந்திய தூதரகம்…!தாமதமான முக்கிய நிகழ்வு…!samugammedia

வடமாகாண ஆளுநரின் வருகைக்காக இந்திய தூதரகத்தின் நிகழ்வொன்று 40 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பமான சம்பவம் இன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் இந்தியத் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்திய பொருளாதார ஒத்துழைப்பு தின நிகழ்வு யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த நிகழ்வுக்கு வட மாகாண ஆளுநர் பி.எச்.எம் சாள்ஸ் அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்வு 12 மணிக்கு ஆரம்பமாகுமென ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் 12.40 தாண்டியும் குறித்த நிகழ்வுக்கு வருகை தரவில்லை.
நிகழ்வை ஏற்பாடு செய்த யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம், ஆளுநர் வருகை தாமதாகும் எனவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பொறுமை இழந்த தூதரக உத்தியோகத்தர்கள் 12.40 பின்னர் ஆளுநர் வருகையை பாராது நிகழ்வை ஆரம்பித்தனர்.
ஏற்கனவே யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வடமாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வில் ஆளுநர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *