ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை மறுசீரமைப்பதற்காக திறைசேரியில் இருந்து உரிய முன்மொழிவுகள் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, மறுசீரமைப்புக்கான அபிலாஷைகளுக்கு அழைப்பு விடுப்பது சிக்கலாக மாறியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தொடர்பில் இதுவரை எந்தவொரு முதலீட்டாளரும் முன்வரவில்லை என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக இந்த மாத இறுதிக்குள் அழைப்பு விடுக்க எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த பணிகள் பெப்ரவரி மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.





