வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன் சிகிச்சையை மக்களுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, வெள்ள நிலைமை காரணமாக ஈக்கள் மற்றும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





