தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இன்று(10) இடம் பெற்றது.
இந்த நிகழ்வில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தேசிய தொழிற் தகைமை கற்கை நெறியை பூர்த்தி செய்த 575 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.












