தமிழகத்தில் இருந்து திரும்பிய மூவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது! samugammedia

தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியிருந்த நிலையில் கடல் வழியாக இலங்கை திரும்பிய குடத்தனையை சேர்ந்த மூவர் பருத்தித்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர் சூழலின் போது குடத்தனை வடக்கைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளும் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு சென்று வாழ்ந்து வந்த நிலையில் இலங்கை திரும்பி தங்கியிருந்த போது பருத்திதுறை பொலிசாரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடத்தனை வடக்கு பகுதியை சேர்ந்த சின்னராஜா நாகேஸ்வரி (வயது- 58) மகளான சின்னராஜா சுதர்சினி (வயது-42) மகனான சின்னராஜா சுதாகரன் (வயது-39) ஆகியோர் கடந்த 29 ம் திகதி வெள்ளிக்கிழமை கோடியாக்கரையில் இருந்து இந்திய மீனவர்களது உதவியுடன் படகு மூலம் குடத்தனை பகுதியில் வந்திறங்கி உறவினர் வீடு ஒன்றில் தங்கி  இருந்த நிலையில் பருத்தித்துறை பொலிசாரால் நேற்றைய தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் விசாரணை நடாத்திவரும் பருத்தித்துறை பொலிஸார் இன்று(11) புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *